"நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்" (ஆதியாகமம் 26:3) - இது ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குக்கு உரைக்கப்பட்ட கர்த்தருடைய வாக்குத்தத்தமாகும். அதை அவர் அவ்வண்ணமே அவனுக்கு நிறைவேற்றினார் (வசனம் 12). விசுவாச மார்க்கத்தாராகிய நாம் ஆபிரகாமின் சந்ததியாராயிருப்பதால், நம்மையும் அவ்வாறே ஆசீர்வதிக்க அவர் மனமுவந்திருக்கிறார் (கலாத்தியர் 3:7,9). அதற்காக நாம் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய பிரகாரமாக ஒரு 'ஈசாக்காக' மாற வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். ஆகவே ஈசாக்கைக் குறித்து நாம் ஆராய்ந்து, அவனது பெயரும் ஜீவியமும் வெளிப்படுத்தும் திவ்ய சுபாவங்களை நம்மிலும் கட்டி எழுப்பிக்கொள்வோமாக.
1. மகிழ்ச்சி
ஆபிரகாம் தொண்ணூற்றொன்பது வயதுள்ளவனாயிருந்தபோது தேவன் அவனை நோக்கி, "உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்; அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; குறித்த காலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்" (ஆதியாகமம் 17:19, 21) என்றுரைத்தார்.
'ஈசாக்கு' என்ற பதம் 'நகைத்தல்' அல்லது 'மகிழ்ச்சி' என்று பொருள்படும். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது சாராள், "தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடே கூட நகைப்பார்கள்" (ஆதியாகமம் 21:5, 6) என்று கூறியதாக நாம் வாசிக்கிறோம். தம்முடைய ஜனங்கள் எப்போதும் தம்மில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
தேவன் நமக்கு நியமித்திருக்கும் வழி இடுக்கமும் நெருக்கமுமானதே! ஆயினும் நாம் எப்பொழுதும் அவருக்குள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்; நாம் எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் அவரை ஸ்தோத்தரிக்க வேண்டும் என்பதே நம்மைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:16, 18; எபேசியர் 5:20). கிறிஸ்துவினிமித்தமாக நாம் பலவிதமான பாடுகளினூடாகக் கடந்து செல்ல வேண்டியதாயிருந்தாலும், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல" என்ற வெளிப்படுத்தலுடன் அந்தப் பாதைகளையெல்லாம் நாம் மகிழ்ச்சியுடன் கடந்து செல்லுவோமாக.
"என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" (மத்தேயு 5:11, 12) என ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கிறாரே!
சத்தியத்தினிமித்தம் சிறைச்சாலையில் கட்டப்பட்டவராக இருந்த அப்போஸ்தலனாகிய பவுல், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:4) என்று சபைக்கு எழுதுகிறார். "கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதை மாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்" (அப்போஸ்தலர் 20:23, 24) என்பது அவரது உறுதியான அறிக்கையாயிருந்தது. இரட்சணியத்தின் சந்தோஷத்துடன் நம் ஆவிக்குரிய ஓட்டத்தை ஆரம்பித்த நாம், வெற்றியின் ஆர்ப்பரிப்புடனேயே அதனை முடிக்க வேண்டும் (சங்கீதம் 51:12; வெளிப்படுத்தல் 19:7).
நம்முடைய வாழ்நாளெல்லாம் நாம் களிகூர்ந்து மகிழ வேண்டுமென்றே தேவன் நம்மைக் குறித்து விரும்புகிறார். கடந்த காலத்தில் நாம் ஒருவேளை சிறுமையும் துன்பமும் நிறைந்த பாதைகளைக் கடந்து வந்திருக்கக்கூடும். "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்" (சங்கீதம் 90:15) என்பது நம் விண்ணப்பமாயிருந்திருக்கக்கூடும். "நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்" (ஏசாயா 65:18) என வாக்குரைத்தவர் நம் சூழ்நிலைகளை மாற்ற வல்லவராயிருக்கிறார் என்ற விசுவாசத்துடன் நாம் கர்த்தரைத் துதிப்போமாக.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நாம் கர்த்தரைத் துதித்தலோடு துவங்கி, அவரை உயர்த்தும் துதியுடன் முடிக்கத் தீர்மானிப்போமாக. அப்படியானால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் நமக்குச் சகாயம்பண்ணுவார் (சங்கீதம் 46:5); காலையிலே தமது கிருபையால் அவர் நம்மைத் திருப்தியாக்குவார் (சங்கீதம் 90:14). காலைதோறும் அவருடைய கிருபைக்கும், இரவுதோறும் அவரது சத்தியத்துக்கும் நம்மைச் சாட்சிகளாக்குவார் (சங்கீதம் 92:2,3). "கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்" (வசனம் 4) என்பது நம் அனுபவமாகும். "கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்" (வசனம் 5) என்பது நம் ஜீவியத்தின் அறிக்கையாயிருக்கும்.
"மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்துவிட்டீர்" (சங்கீதம் 66:12) என்பது நம் சாட்சியாயிருக்கும். "கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்" (எரேமியா 31:13) என்றுரைத்தவர் நம் வாழ்நாளெல்லாம் நம்மை மகிழ்விப்பார்.
2. அர்ப்பணம்
ஈசாக்கு ஓர் இளைஞனாயிருந்தபோது, அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாம் கர்த்தரால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியே அவனை அவருக்குத் தகனபலியாகச் செலுத்துவதற்காக மோரியா மலைக்கு அழைத்துச் சென்றார். "அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்" (ஆதியாகமம் 22:9).
ஈசாக்கு, தான் கட்டப்படுவதற்கும் பலியாக்கப்படுவதற்கும் தன்னை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தான். அவன் தன் தகப்பனை எதிர்க்கவில்லை, கேள்வி கேட்கவில்லை; ஓடிப்போகவும் முயற்சிக்கவில்லை. எவ்விதக் கேள்வியுமின்றி தேவ சித்தத்திற்கு இணங்கித் தங்களை முற்றிலுமாக அர்ப்பணிக்கிறவர்களைத் தேவன் ஆசீர்வதிக்கிறார் என்னும் சத்தியத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
கர்த்தராகிய இயேசு பிதாவின் சித்தம் செய்யும்படி தம்மைத்தாமே முற்றிலுமாக மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தார். "ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்; ... உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ, வருகிறேன்" (எபிரெயார் 10:5-7) என்ற அறிக்கையுடன் இப்பூமிக்கு வந்த அவர் மனுக்குலத்திற்கு மாபெரும் ஆசீர்வாதமானார்.
அப்போஸ்தலனாகிய பவுலுங்கூட "எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்" (அப்போஸ்தலர் 21:13) என்று கூறுகிறார். அவர் கர்த்தராகிய இயேசுவுக்காகப் பாடுபடுவதற்கும் அவருக்காக மரிப்பதற்கும் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்திருந்தார். அதினிமித்தம் அவர் தன்னுடைய ஜீவியகாலத்தில் ஏராளமான ஆத்துமாக்களுக்குப் பிரயோஜனமாயிருந்தது மாத்திரமல்ல, இன்றும் அவரது நிருபங்கள் ஆயிரமாயிரமான தேவ ஜனங்களுக்கு ஆசீர்வாதமாகத் திகழ்கின்றன.
"அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்" (ரோமர் 6:19) என்றும், "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:1,2) என்றும் அவர் எழுதுகிறார்.
நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு அவயவமும் கர்த்தருக்குச் சொந்தமானதாயிருக்கிறது. நாம் நம்முடைய சரீரத்தின் அவயவங்களை ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தம் செய்ய வேண்டும். தங்களைக் கர்த்தருக்கென்று முற்றிலும் ஒப்புக்கொடுக்கிறவர்களையே அவர் ஆசீர்வதிப்பார். அவர்களையே மற்றவர்களுக்கும் அவர் ஆசீர்வாதமாக்குவார். எனவே நாம் நம்மையும் நமக்குரிய யாவற்றையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, "நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்" (ஆதியாகமம் 22:17) என்ற அவருடைய வாக்குத்தத்தத்தை நம் சொந்தமாக்கிக்கொள்வோமாக. நாம் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் (2 தீமோத்தேயு 1:12).

3. விசுவாசம்
ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் செல்கையில், ஈசாக்கு தனக்குச் சம்பவிக்கப்போகிறவைகளைச் சற்றும் அறியாதவனாகவே தன் தகப்பனின் பின் சென்றான். வழியில் அவன் தன் தகப்பனிடம், "என் தகப்பனே, இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்கவே, ஆபிரகாம், "என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்" என்று பதிலளித்தான்.
ஈசாக்கு அதை அப்படியே விசுவாசித்து, பின்பு ஒரு கேள்வியும் கேட்காமல் தன் தகப்பனுடன் வழிநடந்தான். 'அப்புறம் இருவரும் கூடிப்போனார்கள்' என்று நாம் வாசிக்கிறோம் (ஆதியாகமம் 22:7,8). இது, ஆபிரகாமோடு கூட ஈசாக்கும் விசுவாசித்தான் என்பதைக் குறிக்கிறது. இந்த விசுவாசத்தை அவன் தன் தகப்பனிடத்திலிருந்தே கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி தேவனால் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனதையும், தான் விசுவாசத்தினால் பல வருடங்கள் காத்திருந்து தன் குமாரனாகிய ஈசாக்கைப் பெற்றுக்கொண்டதையும், ஈசாக்கினுடைய சிறுவயதிலிருந்தே அவனுக்குக் கூறி, விசுவாசத்தை ஊட்டி வளர்த்திருந்தான். இந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் கூறிய விசுவாச வார்த்தைகள் பலனளித்தன. தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொண்டார்; அந்த மலையின் மேலேயே ஒரு ஆட்டுக்கடா அவனுக்காக ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்ததை ஏற்ற வேளையில் தேவன் அவனுக்குக் காண்பித்தார்.
தன் தகப்பன் கூறியதை அப்படியே விசுவாசித்த ஈசாக்கும் தேவனை 'யேகோவாயீரே'யாக (தேவைகளைச் சந்திப்பவராக) அங்கு கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தான். அவர்கள் தேவனுக்குப் பலி செலுத்தி, சந்தோஷத்தோடு திரும்பிவந்தார்கள். நம்மிலும் அப்படிப்பட்டதொரு விசுவாசம் இருக்க வேண்டும். "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்" (எபிரெயார் 11:6) என்று வேதவசனம் கூறுகிறதன்றோ! எனவே நாம் தேவனை விசுவாசித்து எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவராக அவரை அனுபவிப்போமாக.

4. தியான ஜீவியம்
'ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியிலே போயிருந்தான்' (ஆதியாகமம் 24:63) என நாம் காண்கிறோம். அவன் கர்த்தரின் செயல்களைத் தியானம்பண்ணிக்கொண்டிருக்கையில், கர்த்தர் அவனுக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பவராக அவனுக்காகக் கிரியை செய்துகொண்டிருந்தார். அவனுக்கு ஏற்ற துணையை அவனுக்காக ஆயத்தப்படுத்தியிருந்தார்.
அந்திசந்தி மத்தியான வேளைகளிலும், இராச்சாமங்களிலும் கர்த்தரையும் அவரது செயல்களையும் தியானம்பண்ணுதல் தாவீதின் அனுபவமாயிருந்தது. அவ்வாறு அவன் தியானித்ததினால் கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டார். நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல அவனுடைய ஆத்துமா திருப்தியாயிற்று (சங்கீதம் 55:17; 63:5,6). புதிய ஏற்பாட்டுத் தேவ ஜனங்களாகிய நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் தாழ்மை, அன்பு, மன்னித்தல் போன்ற திவ்ய சுபாவங்களையும், அவரது கல்வாரிப் பாடுகளையும் அனுதினமும் தியானிக்க வேண்டும். அப்போது மட்டுமே நாமும் அவரைப் போல ஜீவிக்க இயலும்.
மேலும் நமக்குப் பெலவீனங்கள், வியாதிகள் வரும் வேளைகளில் வியாதியின் கொடூரத்தையோ, அதின் ஆபத்தான தன்மையையோ நோக்கிப்பார்த்து எதிர்மறையான காரியங்களை நாம் தியானிக்காமல், தேவனுடைய கிருபையையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும், அவருடைய குணமாக்கும் வல்லமையையும் தியானிக்க வேண்டும்; அப்போது அவரது உயிர்ப்பிக்கும் வல்லமையை நாம் பெற்றனுபவிப்போம்.
அது மட்டுமல்ல, "உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்" (சங்கீதம் 77:12) என்றும், "நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது" (சங்கீதம் 39:3) என்றும், "நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்" (சங்கீதம் 104:34) என்றும் சங்கீதக்காரன் கூறுகிறாப்போல நாம் கர்த்தரையும் அவரது செயல்களையும் தியானிப்போமாயின், நம் நினைவுகள் இனிமையாயும், நம் ஜீவிய யாத்திரை மகிழ்ச்சிகரமானதாயும் இருக்கும்.
அன்றியும், கர்த்தருடைய வார்த்தைகளை நாம் நாள்முழுதும் தியானம்பண்ண வேண்டும். "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 1:2) என்றும், "உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்" (சங்கீதம் 119:97) என்றும் எழுதப்பட்டுள்ளதே. "இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்" (யோசுவா 1:8) என்று யோசுவாவுக்கும் சொல்லப்பட்டது. நாம் தேவனுடைய வசனத்தை தியானிக்கும்போது தேவன் நம்மை ஞானவான்களாக மாற்றுவார்; நம் வழிகளையும் வாய்க்கப்பண்ணுவார். "உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்" (சங்கீதம் 119:99) என்று சங்கீதக்காரன் கூறுகிறானன்றோ!
சில வேளைகளில் நாம் மற்றவர்களுடைய குறைகள் மற்றும் பிறர் நமக்குச் செய்த தீமைகள் போன்ற தவறான காரியங்களைத் தியானித்து, நிர்ப்பந்தமான நிலைக்குள்ளாகிறோம். மாறாக, 'நான் பரிசுத்த ஜீவியம் செய்வது எப்படி? மற்றவர்களுக்கு மாதிரியாய் ஜீவிப்பது எப்படி?' போன்ற சரியான காரியங்களையே நாம் தியானிப்போமாயின், நாம் உலகிற்கு ஆசீர்வாதமாகத் திகழ்வோம். "தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு" (நீதிமொழிகள் 14:22) என்று எழுதப்பட்டுள்ளதே!
ஆகவே நாம் 'உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளைத் தியானித்துக்கொண்டிருப்போமாக' (பிலிப்பியர் 4:8). நாம் பரிசுத்தவான்களிடத்தில் கற்றுக்கொண்டவைகளின்படி நடப்போமாக; அப்பொழுது சமாதானத்தின் தேவன் நம்மோடிருப்பார்; அவர் சீக்கிரமாய்ச் சாத்தானை நம் கால்களின் கீழ் நசுக்கிப்போடுவார் (பிலிப்பியர் 4:9; ரோமர் 16:20). ஈசாக்கின் தேவன் நம்முடைய தேவனாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.