இவர்கள் அனைவரையும் தவிர, அவர் தாம் சென்ற சகல இடங்களுக்கும் தமக்கு முன்பாக இரண்டிரண்டு பேராக அனுப்பும்படி எழுபது சீஷர்களை நியமித்திருந்தார் (லூக்கா 10:1). மேலும் தேவபக்தியுள்ளவர்களும், அவர் மூலமாகத் தங்கள் ஜீவியத்தில் பலவிதங்களில் விடுதலையைப் பெற்றனுபவித்திருந்தவர்களும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து வந்தவர்களுமான சில ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றனர் (லூக்கா 8:2, 3; மாற்கு 15:40, 41). ஆனால் அவர் தாம் உயிர்த்தெழுந்தபோது, அவர்கள் அனைவரிலும் மகதலேனா மரியாளுக்கே முதல்முதல் தரிசனமானார் (மாற்கு 16:9) என எழுதப்பட்டிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதன்றோ!
கிறிஸ்துவின் நாளில் நாம் அவரை முகமுகமாகத் தரிசிக்கத்தக்கதாக - மகதலேனா மரியாளுக்கு அவர் தம்மை முதன்முதலாக வெளிப்படுத்துமளவிற்கு அவளிலிருந்த விசேஷம் யாது என்பதை இங்கு நாம் ஆராய்ந்து, அதனை நம் அனுபவமாக்கிக்கொள்ளுவோமாக!
மரியாளின் அன்பும் நன்றியுணர்வும்
நமதாண்டவராகிய இயேசு இப்பூமியிலிருந்த நாட்களில் யூதேயாவில் 'மரியாள்' என்னும் பெயரைக் கொண்ட ஐந்து ஸ்திரீகள் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், மகதலேனா மரிய என்பவள், ஏழு பிசாசுகளினால் பீடிக்கப்பட்டவளாயிருந்து கர்த்தராகிய இயேசுவினால் அவற்றினின்று விடுதலையாக்கப்பட்டவள் ஆவாள். அதற்குப் பின் அவள் மற்ற சில ஸ்திரீகளுடன் அவருக்குப் பின்சென்று, அவருக்கு ஊழியஞ்செய்துவந்தாள் (மாற்கு 15:40).
நமதாண்டவர் சிலுவையிலறையப்பட்டு, மரித்து, கல்லறையில் வைக்கப்பட்ட வேளையில், அவருடைய தாயாராகிய மரியாளுடன் அக்கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தவள் அவளே! (மத் 27:61). பொதுவாக, கல்லறைத்தோட்டத்தில் எவரும் அமர்ந்திருப்பதில்லை. தன் ஆண்டவர் பிசாசுகளின் பிடியினின்று தன்னை விடுவித்ததினிமித்தம் தனக்கிருந்த நன்றியுணர்வினால், அவர் பேரில் அன்பினால் நிறைந்திருந்த அவள், அவரை இழந்துவிட்டதினால் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்ததே - மாலை மயங்கும் அவ்வேளையில் மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தில் அவள் நம் ஆண்டவரின் தாயாருடன் உட்கார்ந்திருந்ததின் காரணமாகும்.
மறுநாளாகிய ஓய்வுநாளில் யூதருக்கு விதிக்கப்பட்டிருந்த வேதப்பிரமாணத்தின்படியே ஓய்ந்திருந்த அவள், வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் அவருடைய சரீரத்திற்குச் சுகந்தவர்க்கமிடும்படியாக வேறு சில ஸ்திரீகளையும் கூட்டிக்கொண்டு, அதிக இருட்டோடே அவருடைய கல்லறையினிடத்திற்குச் சென்றாள் (லூக்கா 24:1, 10; யோவான் 20:1). அவர்கள் அக்கல்வறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருந்ததையும், அதனுள் ஆண்டவருடைய சரீரம் இல்லாததையும் கண்டு அதிர்ச்சியுற்றனர். மற்ற ஸ்திரீகள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர்.
மகதலேனா மரியாளோ அவருடைய சீஷர்கள் இருவரிடத்தில் ஓடிப்போய், "கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை" (யோவான் 20:2) என்று கூறினாள். அவ்விரு சீஷர்களும் கல்லறையினிடத்திற்கு ஓடி வந்து அதன் உள்ளே குனிந்து பார்த்தனர். பின்பு கல்லறைக்குள்ளே பிரவேசித்துப் பார்த்தனர். அவருடைய சரீரம் சுற்றி வைக்கப்பட்டிருந்த சீலைகளை மட்டுமே அங்கு அவர்கள் கண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். ஆனால் மரியாளோ மீண்டும் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள் (வச. 3-11).

1. கண்ணீருடன் தேடுதல்!
வாரத்தின் முதலாம் நாள் காலையில் மகதலேனா மரியாள் அதிக இருட்டோடே கர்த்தராகிய இயேசுவின் கல்லறையினிடத்திற்குச் சென்றாள் என்றும், அவள் "கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்" என்றும் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுகிறார் (யோவான் 20:1, 11). கல்லறையினிடத்துக்கு அதிக இருட்டோடே செல்லவும், அங்கே தனியே நின்றுகொண்டிருக்கவும் எவரும் துணிய மாட்டார்கள். அதிலும், பெண்கள் அவ்வழியாகச் செல்லவுங்கூட விரும்ப மாட்டார்கள்.
ஆனால் தனியாகக் கல்லறையினருகே வெளியே நின்றுகொண்டிருக்கும் அளவிற்கு தன் ஆண்டவர் பேரில் மகதலேனா மரியாளுக்கிருந்த அன்பானது எந்தப் பிரதிகூலமான சூழ்நிலையையும் கடந்துசெல்வதாயிருந்தது! முன்பு அவளுடனேகூட கல்லறையினிடத்திற்குச் சென்ற ஸ்திரீகளும், அவர்களுக்குப் பின்னர் அங்கு சென்ற சீஷர்களாகிய பேதுருவும் யோவானுங்கூட தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்ட பின்னரும், மகதலேனா மரியாளோ அங்கேயே தனிமையாக நின்று அழுதுகொண்டிருந்தாள்!
அழுதுகொண்டிருந்த அவள் குனிந்து கல்லறைக்குள் பார்த்தபோது, பரத்திலிருந்து அனுப்பப்பட்டு அங்கே அமர்ந்திருந்த இரண்டு தேவதூதர்களைக் கண்டாள் (வச. 12). சற்று முன்னர் கல்லறைக்குள் பிரவேசித்துப் பார்த்த சீஷர்களுக்கு அத்தேவதூதர்கள் வெளிப்படவில்லை. அவளுடைய கண்ணீருக்குப் பதிலளிக்கவே அத்தேவதூதர்கள் அங்கே அனுப்பப்பட்டிருந்தனர்! ஆம், ஆவலுடன் தன் ஆண்டவரைத் தேடிக்கொண்டிருந்த மரியாளுடன் பரலோகம் செயல்பட ஆரம்பித்தது.

"ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?" என்று அத்தேவதூதர்கள் அவளைப் பரிவுடன் விசாரித்தனர். நாம் எந்த அளவுக்குக் கர்த்தரில் அன்புகூர்ந்து, கண்ணீரோடு அவரைத் தேடுகிறோமோ, அந்த அளவுக்கு அவர் நமக்குத் தம்மை வெளிப்படுத்த ஆவலுள்ளவராயிருக்கிறார் என்பதை இதினின்று நாம் விளங்கிக்கொள்கிறோம்.
2. அர்ப்பணிப்புடன் தேடுதல்!
"ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?" என்று தன்னைப் பரிவுடன் விசாரித்த தேவதூதர்களை நோக்கி மகதலேனா மரியாள்: "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை" (யோவான் 20:13) என்றுரைத்தாள். சற்று முன்பு சீஷரிடம், "கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்" (வச. 2) என்று கூறிய அவள், இப்போது தேவதூதர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்" என்று கூறுகிறாள்!
அவள் அவரை 'என் ஆண்டவர்' என்று குறிப்பிட்டுத் தேடிக்கொண்டிருந்தது, அவர் பேரில் அவளுக்கிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. 'என்' என்பது தனிப்பட்ட உரிமையையும், 'ஆண்டவர்' என்பது அவர் அவள் மேல் கொண்டுள்ள ஆளுகையையும் குறிக்கிறது. அப். பவுல் ஒரு சந்தர்ப்பத்தில் தன் ஆண்டவரை, "என்னை ஆட்கொண்டவரும், நான் யாருக்குச் சொந்தமோ அவருமானவர்" (அப் 27:23) என்று குறிப்பிடுவதும் இதே பொருளைக் கொண்டதே!
அருமையான தேவபிள்ளையே, நீ கர்த்தரைத் தேடும் விதம் எத்தகையதாக உள்ளது? அவரை நீ உன் ஆண்டவராக, உன் வாழ்க்கையை ஆண்டு நடத்துகிறவராகவே ஏற்றுக்கொண்டிருப்பாயாகில், நீ அவரைத் தேடும் விதம் மேலோட்டமானதாக இராது. மகதலேனா மரியாள் மிகுந்த ஆவலுடனும் கண்ணீருடனும், அர்ப்பணிப்புடனும் கர்த்தரைத் தேடிக்கொண்டிருந்தபோதிலும், அவர் அவளுக்கு வெளிப்படாமல், இன்னும் மேன்மையானதொரு நிலைக்கு அவள் வரும்படியாகத் தம்மை மறைத்துக்கொண்டிருந்தார்!
3. கருத்துடன் தேடுதல்!
மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்திருந்தார். அவளுடைய வாஞ்சையை அறிந்திருந்த அவர், அவள் அங்கு வந்த உடனேயே அவளுக்குத் தம்மை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவரோ அப்படிச் செய்யவில்லை. "தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்" (எபி 11:6) என்று திருவசனம் கூறுகிறது. கருத்துடன் தேடுதல் என்பது, கண்டடையும் வரை முழு இருதயத்துடனும் தேடுதல் ஆகும்.
"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன்" (எரே 29:13, 14) என்று உரைத்திருக்கிறவர், அவள் தம்மை கண்டடையும் வரை சோர்ந்துபோகாமல் முழு இருதயத்துடனும் தம்மைத் தேட வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
இதற்கு உதாரணமாக, உன்னதப்பாட்டு 3-ஆம் அதிகாரத்தில் தன் ஆத்தும நேசரைத் தேடும் சூலமித்தியைக் காண்கிறோம். அவள் தன் படுக்கையிலிருந்து தேடியும் காணாதபோது, எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் கருத்துடன் தேடுகிறாள் (உன் 3:1, 2). காவலாளரிடமும் விசாரித்த பின்னரும் அவள் சலிப்படையவில்லை. "நான் அவர்களை விட்டுச் சற்று தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் விடாமல் பற்றிக்கொண்டு என் தாயின் வீட்டிற்கு அழைத்து வந்தேன்" (வச. 4) என்று கூறுகிறாள்.
அருமையான தேவபிள்ளையே, உன் ஆத்தும நேசரை நீ தேடுவதின் தரமானது, அவர் உனக்கு எவ்வளவு விலையேறப்பெற்றவராக இருக்கிறாரோ, அதைப் பொறுத்ததாகவே இருக்கும். தொலைந்துபோன வெள்ளிக்காசைத் தேடும் ஸ்திரீயைப் போல (லூக்கா 15:8), உன் ஆண்டவர் உனக்கு அருமையானவராயிருப்பாராயின், அவரை உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ எந்தக் கிரயமும் செலுத்த ஆயத்தமாயிருப்பாய்!
4. கண்டடையத்தக்க சமயத்தில் தேடுதல்!

"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்" (ஏசாயா 55:6) என்று திருவசனம் கூறுகிறது. இக்கிருபையின் காலமே நாம் கர்த்தரைத் தேடத்தக்க சமயம். "கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது" (ஓசியா 10:12) என்று எழுதப்பட்டுள்ளது.
இக்கிருபையின் காலத்தில் நாம் அவரைக் கருத்துடன் தேடாவிட்டால், உபத்திரவ காலத்தில் அவர் நம்மை விட்டுத் தம் ஸ்தானத்திற்குத் திரும்பிப்போய்விடுவார் (ஓசியா 5:15). காலங்கடந்து தேடிய ஏசாவைப் போல நாம் ஆகிவிடக்கூடாது. ஆகவே, மென்மேலும் தாழ்மையின் ஆழங்களுக்குள் சென்று, முழு இருதயத்துடனும் அவரைத் தேடுவாயாக! "தேடுகிறவன் கண்டடைகிறான்" (மத் 7:8). மகதலேனா மரியாள் போல அதிகாலையில் அவரைத் தேடினால் நிச்சயமாகக் கண்டடைவாய் (நீதி 8:17).
5. ஒன்றையே தேடுதல்!
மகதலேனா மரியாள் அழுதுகொண்டிருந்தபோது, "ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" (யோவான் 20:15) என்ற கனிவான குரல் கேட்டது. அவள் அவரைத் தோட்டக்காரன் என்று எண்ணி, "ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்" என்றாள்.
"கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்" (சங் 27:4) என்பதே அவளது அனுபவமாயிருந்தது! "நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்" என்ற அவளது கூற்றில் அவளது உன்னதமான அன்பு வெளிப்படுகிறது. மரித்த சடலமான அவரை எடுத்துச் செல்வதினால் அவளுக்கு என்ன பயன்? ஊரார் என்ன பேசுவார்கள்? இந்த எண்ணங்கள் ஏதும் அவளுக்கு இல்லை. "என் ஆண்டவர் எனக்கு வேண்டும்!" என்பதே அவளது உள்ளத்தின் கதறுதலாயிருந்தது (சங் 42:1, 2). அவளது தேட்டம் இந்த நிலையை எட்டிய பின்னர், கர்த்தரால் தம்மை வெளிப்படுத்தாமலிருக்க இயலவில்லை!
ஆத்தும நேசரை முகமுகமாய்த் தரிசித்தல்!
மரியாளது உத்தமமான தேடுதல் கர்த்தரை இழுத்துக்கொண்டது. அவர், "மரியாளே!" என்று பேர்சொல்லி அழைத்தார் (யோவான் 20:16). அந்தச் சத்தத்தை இனங்கண்டவளாய் அவள் 'போதகரே' என்று கூறி, அவரை முகமுகமாகத் தரிசித்தாள்! உயிரற்ற சடலமாக அல்ல, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவராகவே கண்டாள். அழுதுகொண்டிருந்த குழந்தை தன் தாயைக் கண்டதும் அடையும் மகிழ்ச்சியைப் போல அவள் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தாள்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்து, பிதாவின் சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படி பரலோகத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய மிக முக்கியமான பணியில் இருந்தபோது, ஓர் ஏழை ஆத்துமாவின் கண்ணீர் அவரை இடையில் சற்று நேரம் தரித்து நிற்கச் செய்துவிட்டது! அதனால்தான் அவர், "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" (யோவான் 20:17) என்றுரைத்தார்.
மகதலேனா மரியாளின் கண்ணீருக்கும் தேடுதலுக்கும் கிடைத்த பலன் இது! "இனி நீ அழுதுகொண்டிராய்" (ஏசாயா 30:19) என்ற வாக்குத்தத்தம் அவளில் நிறைவேறிற்று. "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!" என்ற நற்செய்தி முதன்முதலில் அவளுக்கே வெளிப்படுத்தப்பட்டது.
அருமையான தேவபிள்ளையே, கிறிஸ்துவின் நாளில் நீ உன் ராஜாவை முகமுகமாய்த் தரிசிக்க விரும்பினால், 'எப்படியாயினும் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்பதே உன் ஒரே வாஞ்சையாய் இருக்கட்டும். அவர் உன்னை அணைத்துக்கொள்ளும் அந்த மகிமையின் நாளில், அவர்தாமே உன் கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி 21:4). அன்று உன் துக்கம் சந்தோஷமாக மாறும்! முடிவில்லா மகிழ்ச்சி உன் பங்காயிருக்கும்!

பிரியமானவர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.